சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா, அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது. என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது. அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே. profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது. ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது phoneல் பேசவும் செய்வான். அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்... ...
புத்தகம் நமக்காகான ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம். நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல. வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று. எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை. மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர். அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும். அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும். தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம். ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள். பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம். அதில் அவர்க...