சில கோபங்கள் சில வருத்தங்கள் சில குழப்பங்கள் காரணம் கண்டு கொண்டபின் இதுதான் உண்மை காரணமா என மீண்டும் அதே போலான சில குழப்பங்கள் சில வருத்தங்கள் சில கோபங்கள் காரணம் கண்டதின் தொடர்ச்சியாக தீர்வின் பக்கம் செல்ல எத்தனிக்கையில் கடந்த கால கைதியாக மனம் செல்ல மீண்டும் சில வருத்தங்கள் சில கோபங்கள் சில குழப்பங்கள் எட்டிச் சென்று தீர்வு இதுவென முடிவெடுக்கையில் இதுதான் தீர்வா என கேள்வி எழும்போது முழுக்க வெறுமையே எஞ்சுகிறது ஆக முடிவென ஒன்று நம்மை வெறுமையாக்குகிறதா கேள்வி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே மனம் குதூகலிக்கிறது வருத்தங்கள் கோபங்கள் குழப்பங்கள் இவையே அடுத்தவற்றை நோக்கி எனை வழிநடத்துகிறது இதுதான் தீர்வு இதுதான் முடிவு இப்படியாப்பட்ட நிலை வெறுமையில் தள்ளவே செய்கிறது எவ்வளவு உழட்டினாலும் என்னுடைய வருத்த கோப குழப்பங்கள் எனை எப்பொழுதும் வெறுமையில் தள்ளியதில்லை வாழிய வாழியவே
வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது. வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம். முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை. ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார். சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர். முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது. ...