டீக்கடை, காலை 6:30... இன்னும் எத்தனை காலத்துக்கு சைக்கிளை மிதித்து கொண்டிருப்பாயென அவரை ஒருவர் இடைமறிக்கும் போதுதான் கவனிக்க நேர்ந்தது. அவரின் தோற்றத்தை வைத்து வயது 30+ என சொல்லலாம். இல்லண்ணே என ஆரம்பித்த அவர், இதுவே போதுமானதாக இருப்பதாக அர்த்தமளிக்கும் ஒன்றினை அவர் பேசி முடிக்கும் போது என் டீ ஆறிவிட்டது. ஒரே விஷயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதமாக சொன்னார். அது முற்றிலும் இயலாமை சம்பந்தபட்ட விஷயம். வார்த்தைகளின் ஊடே அந்த இயலாமை மறைந்து இருந்தது, அவரின் பேச்சின் வீரியத்திற்கு பயந்து வெளிவர தயங்கியது என்பதே உண்மை. வண்டியை பற்றிய பேச்சு இப்பொழுது கல்யாணம் நோக்கி திரும்பியது. வரும் மாரியம்மன் கோவில் பொங்கலுக்குள் கல்யாணம் பண்ணி ஜோடியாக இதே ரோட்டில் அப்படி கெத்தா நடப்பேன் பாருங்கன்னு அவர் சொல்லும் தொனிக்கு கண்கள் சிறிது கலங்கியது என்னமோ உண்மை. எப்படி என விளக்க தெரியவில்லை, காரணமும் புரியவில்லை. தன் அண்ணனின் கல்யாணத்தில் லட்சம் செலவானதென வருத்தப்பட்டார். கோடீஸ்வரன் கல்யாணத்துல கூட பாதாம் பால் வைக்க மாட்டாங்க. ஆனா, ...