புத்தகம் நமக்காகான ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம்.
நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல. வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று.
எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை.
மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர்.
அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும். அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும்.
தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம். ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம். அதில் அவர்களுக்கு சரி தவறு தெரியாது என்பது உண்மைதான். அதனை கடக்க பெற்றோர் உதவி இல்லாமல் முயற்சிப்பது கடினம் என்பதும் அப்பட்டமான உண்மை.
ஆனால், எது முடியும் எது முடியாது என்பதை அவர்கள் எளிதில் கண்டு கொள்வார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக தேவை பெற்றோர்களின் அனுபவத்துடன் கூடிய பிள்ளைகளின் சுய சிந்தனை.
ஒருவர் பகிர்ந்தது: என் உடன் பயின்ற நண்பனொருவன் தனக்கு பிடித்ததை செய்வான் (பெற்றோர் அனுமதியுடன்) யார் கிண்டல் கேளி செய்தாலும் (ஆசிரியர் உட்பட) கண்டுகொள்ள மாட்டான். அப்பொழுதே நெட்டில் எதை தேடினாலும் கிடைக்கும். ஆனால், தேடுவது உன் சாமர்த்தியம் என்றவன். அனைத்தையும் கம்ப்யூட்டரில் (நூலகம் தவிர்த்து) தேடுவதால் நாங்கள் அவனை சோம்பேறி என்பது மட்டுமல்லாது பிரவுசிங் சம்பந்தமான வேறு ஒன்றையும் இணைத்ததால் சில சங்கடத்திற்கும் உள்ளானவன். இப்பொழுது அவன் அவனுக்கு பிடித்த துறையில் உயர்ந்த பதவியில் உள்ளான். கேளி செய்தவர்கள் பலர் இப்பொழுது வியந்து கொண்டிருக்கிறார்கள்! அவன் விரும்பி செய்தது வேறொன்றும் இல்லை கம்ப்யூட்டர் கேம்ஸ் மற்றும் பிரௌசிங்... அவன் விளையாட்டிலும் கலக்கினான் என்பது தனிக்கதை.
Comments
Post a Comment